tamilnadu

img

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 மாணவிகள் படுகாயம்

பெரம்பலூர், அக்.4-  பெரம்பலூர்- அரியலூர் சாலை யில் சித்தளி கிராம பேருந்து நிறுத்த த்தில் குன்னம் அரசுப் பள்ளிக்கு செல்ல பேருந்திற்காக நின்று கொண்டி ருந்த மாணவிகள் மீது தனலட்சுமி சீனி வாசன் கல்லூரி பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது  சாலையோரம் நின்றிருந்த மாண விகள் மீது மோதியது.  இதில் சித்தளி கிராமத்தை சேர்ந்த மாண விகள் சரண்யா(14), அகல்யா(14) உள்பட 6 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள், மாவட்ட அரசு தலைமை மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அதே  கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் கமல மூர்த்தி மகள் காயத்ரி என்ற மாணவிக்கு தலை யில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்  மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதைதொடர்ந்து கிராம பொதுமக்கள் திரண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என். செல்லதுரை, எஸ்.பி.டி.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீ.ஞானசேகரன் தலைமை யில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கூறிய பின்னர் அவர்கள் கலைந்து  சென்றனர்.

;