tamilnadu

img

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் புதிய ஸ்கேன் மையம்

பெரம்பலூர், ஜூன் 6-பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப் பில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மையம்திறப்பு விழா வியாழன்று நடந் தது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் தலைமை வகித்துஎம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும்லித்தோ லேசர் அறுவைசிகிச்சை பிரிவு ஆகியவற்றைதொடங்கி வைத்து பேசினார். டிஆர்ஓ அழகிரிசாமி, நிறுவன செயலாளர் நீல்ராஜ், இயக்குநர் பூபதி மற்றும்மருத்துவமனை ஆலோசகர்ரெங்கநாதன், டீன் மரகதவல்லி, கண்காணிப்பாளர் பானுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது 850 படுக்கை வசதிகளுடன் பல்வேறு பிரிவு சிகிச்சைக்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவையை அளிக்கிறது. நோய்களை மிகத் தெளிவாக, துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க ரூ.8 கோடி மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் சிறுநீரக கற்கள் உடைப்பு கருவியான லேசர் ரூ.50 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்சிறுநீரக கற்களை வலியில்லாமல், கத்தியின்றி, நுண்துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.