பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் புதனன்று மண்ணை தோண்டியபோது அம்மோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. இதனை புவியியல் ஆய்வாளர் வந்துபார்வையிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
அந்த கடல்வாழ் நத்தை களின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலு வலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கல்படி மங்கள் கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.