tamilnadu

img

ஜூலை 27 ல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பெரம்பலூர், ஜூலை 20- அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் பெரம்பலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்திலுள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விவ சாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.கே.ராஜேந்திரன், சீனிவாசன், டி.கே.ராம லிங்கம் சக்திவேல், ஞானசேகரன் ஜெய ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீ. ஞானசேகரன் போராட்டக் குழு நிர்வாகி சர வணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களில், விவசாயிகளுக்கு இது நாள் வரை வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யவும் மின்வாரியத்தை தனியார் மயமாக்கி மின் கட்டணத்தை பல மடங்கு கூடுதலாக்க வகை செய்யும் மின்சார சட்ட திருத்தம் 2020 ஐ திரும்பப்பெற வலியுறுத்தி யும், அத்தியாவசிய பொருட்களை விவசாயி களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வ திலிருந்து மத்திய - மாநில அரசுகள் விலக வகைசெய்யும் அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம் 2020 ஐ வாபஸ் பெற வலியுறுத்தியும் ஒரே நாடு ஒரே சந்தை - விவ சாயிகள் எங்கு வேண்டுமானாலும் விலை பொருட்களை விற்றுக் கொள்ளலாம் என பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதர வான இச்சட்டத்தை திரும்பப்பெற வலி யுறுத்தியும் ஒப்பந்த சாகுபடி முறை மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் விரும் பும் வகையில் சாகுபடி செய்து அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும் என்று வலியுறுத்துகின்ற விவசாயிகள், விலை உத்தரவாத வேளாண் மீதான ஒப்பந்த அவசர சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டது.  

மேலும் இந்த தீர்மானங்கள் அடிப்படை யில், மாவட்ட விவசாயிகளிடம் பல்லாயிரக்க ணக்கான கையெழுத்துகளை பெறுவது என வும் ஜூலை 27 அன்று அனைத்து விவசாயி களின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி வைத்து விட்டு, மாவட்ட தலைநகரான பெரம்ப லூரில் நாராயணசாமி நாயுடு சிலை அருகில் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என வும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொருளா ளர் சின்னசாமி, தியாகராஜன், சாமிதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். என்.பி.அன்பழகன் நன்றி கூறினார்.

;