tamilnadu

img

வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு தேர்தலில் பாஜக, அதிமுகவை வீழ்த்திட விவசாயத் தொழிலாளர்கள் முடிவு

பெரம்பலூர், ஏப்.2- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. விதொச மாவட்டச்செயலாளார் பி.ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் என்.ஜோதி, மதுராவேணி வி.செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தேசிய ஊரக வேலை திட்டமானது விவசாயத் தொழிலாளர் களுக்கு ஒரு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டமாகும். 2014-ல்ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக அரசு இத்திட்டத்தினை சீரழித்து விட்டது. இதே போல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்றபெயரில் மாநிலங்களுக்கான மண் ணெண்ணெய், அரிசி ஒதுக்கீட்டினை குறைத்தது பாஜக அரசு, விவசாயத்தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்நடத்தியும் எந்தவொரு சமூகப் பாதுகாப்பு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை பாஜக அரசு.மேலும் தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். எனவேவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின்விரோத ஆட்சிகளாக உள்ள அதிமுக- பாஜக வீழ்த்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்வைத்திருக்கிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனுக்கும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், அரசியல் சூழ்நிலை குறித்து சிஐடியு மாவட்ட துணைச் செயலர் எஸ்.அகஸ்டின், மாதர் சங்க எ.கலையரசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விதொச நிர்வாகிகள் ஆர்.தேவகி, எல்.ராதா, யோகேஸ்வரி, சிவகாமி,ராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;