tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மறைந்த மேற்கு வங்க மகத்தான திரைப்பட கலைஞர் சவுமித்ரா சட்டர்ஜி மிகச்சிறந்த படைப்பாற்றல் மிக்க கலை இலக்கிய வல்லுனர் மட்டுமல்ல; தீவிர சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டாளரும் ஆவார். மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இடது அரசியல்தான் ஒரே மாற்றுஎன்று தயக்கமில்லாமல் கூறியவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

                                   *********************

மக்கள் மீது சொல்லமுடியாத அளவுக்கு துன்பங்கள்! வானளாவ உயரும் வேலையின்மை! அதிகரிக்கும் பசி பட்டினி! ஆனால் மோடியின் கூட்டுக் கொள்ளை அடிக்கும்முதலாளிகளுக்கு மட்டும் லாபம் செங்குத்தாக உயர்வு. மெகா கொள்ளை. கை மாறாக ஆளுங்கட்சிக்கு தேர்தல் நிதி குவிகிறது.

                                   *********************

இந்திய பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களும் அழிக்கப்படுகின்றன. இந்திய பொருளாதாரத்தின் மீட்சிமோடியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது! ஆனால் உண்மைஎன்னவென்றால் மக்களின் வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது! செப்டம்பர் மாதத்தில் 5.1 மில்லியன் வேலை வாய்ப்புகள் கூடின. ஆனால் அக்டோபரில் 5.7 மில்லியன் வேலைவாய்ப்புகள் சரிந்தன.மோடி முன்வைக்கும் பிரமைகள்நிறைந்த பலூன்கள் வெடித்துச்சிதறுகின்றன.

                                   *********************

பொருளாதாரத்தின் மீட்சி தொடங்க வேண்டும் எனில் உள் கட்டுமான திட்டங்களை உருவாக்க மிகப்பெரிய அளவிற்கு பொது முதலீடுகள் செய்யப்பட வேண்டும். இவை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். அதன்மூலம்உற்பத்திப் பொருட்களை வாங்கும் சக்தி மக்களின் கைகளில் வரும். பொருட்களை உற்பத்தி செய்ய ஆலைகள் புத்துயிர் பெறும்.மோடி அரசாங்கம் இதற்கு எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பொது முதலீடுகள் சரிகின்றன என்பதை மேற்கண்ட ஆய்வு வெளிப்படுத்துகிறது. அது பொருளாதார அழிவுப் பாதை.

+++++++++++++++++++++

சமூக வலைத்தளங்களில் படிக்க....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் https://twitter.com/SitaramYechury