tamilnadu

img

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று... 

பெங்களூரு
நாட்டில் கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் இதுவரை 2.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,810 பேர் பலியாகிய நிலையில், 1.98 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா, சில அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் முதல்வர் எடியூரப்பா குணமடைந்துள்ளார்.  சிலர் சிகிச்சையில் உள்ளனர்.  

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது சிவக்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

;