tamilnadu

img

கர்நாடகாவில் ‘10 மணி நேர வேலை’ ரத்து.... தொழிலாளர் போராட்டங்களுக்கு வெற்றி

பெங்களூரு:
கர்நாடகாவில் வேலை நேரத்தை 10 மணி நேரமாகமாற்றிய பாஜக அரசின் முடிவுக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வேலை நேரத்தை மீண்டும் 8 மணி நேரமாக்க அரசு முடிவு செய்துள்ளது.வேலை நேரத்தை 10 மணிநேரமாக மாற்றிய எடியூரப்பா தலைமையிலான பாஜகஅரசின் முடிவுக்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைமையில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாக மே 22 அன்று பிறப்பித்த தனது சர்ச்சைக்குரிய முடிவை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

;