புவனேஸ்வர்:
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் நவம்பர் 4 அன்று நடத்தியமேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.முந்தைய பினாகா ராக்கெட் ஏவுகணையை விட அதிக தூரம் சென்று இலக்கை எட்டும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் பூனாவை தலைமையிடமாகக்கொண்ட டிஆர்டிஓ ஆய்வக கூடங்களில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 ராக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக சோதனை செய்யப்பட்டு, குறித்த இலக்கை தாக்கி அழித்துவெற்றி பெற்றன. இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட்,தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பினாகா மார்க்- I வகைராக்கெட்டுக்கு மாற்றாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.