tamilnadu

img

தலித் சிறுமி தோட்டத்துப் பூக்களைப் பறித்து விட்டாராம்... 40 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய சாதி வெறியர்கள்..!

புவனேஸ்வர்:
ஒடிசாவில், பதினைந்து வயது தலித்சிறுமி ஒருவர், தோட்டத்திலிருந்த பூவைப் பறித்து விட்டார் என்பதற்காக, அவ்வூரின் 40 தலித் குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சாதியக் கொடுமை நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் தெங்கனல் மாவட் டத்திற்கு உட்பட்டது கண்டியோ கண் டேனி கிராமம். இந்த கிராமத்தில் சுமார்700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 40 குடும்பங்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.இந்த கிராமத்தில், நீண்ட காலமாகவே சாதியப் பாகுபாடும், கொடூரத் தீண்டாமை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தங்களை உயர்சாதியினர் என்று கருதிக் கொள்ளும் ஒருவரின் தோட்டத்தில் இருந்த பூக்களைப் பறித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளரும், அங்குள்ள சாதி ஆதிக்க வெறியர்களும் உடனடியாக கிராமப் பஞ்சாயத்து கூட்டி, அதில்சிறுமியின் குடும்பத்தை நிறுத்தியதுடன், பூக்களைப் பறித்ததற்கு தண்டனையாக கிராமத்தில் உள்ள 40 தலித் குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்து சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளனர். இவர்களுக்கு கடைகளில் எதுவும் வழங்கக் கூடாது என்பதுடன், ரேசனிலும் பொருட்கள் வழங்கப்படக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளனர். இதுதொடர்பான செய்தி ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை அணுகி புகார் அளித்துள்ளனர். எனினும் அதிகாரிகள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
இருதரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சில் எஸ்சி - எஸ்டி (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டத்தின் விதிகளைமேற்கோள் காட்டி, சாதி ஆதிக்க வெறியர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்; அவர்களும் கடந்த கால நிகழ்வுகளை மறந்து சமரசத்திற்கு வந்தனர்; இதனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;