tamilnadu

img

அமித்ஷா பெயரில் மோசடி செய்ததாக இளைஞர் கைது....

புதுதில்லி:
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிச்செயலாளர் என்றபெயரில், மோசடியில் ஈடுபட்டதாக 25 வயது இளைஞர் ஒருவரை தில்லி குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்துள்ளது.

விசாரணையில் அந்த இளைஞர், பிஏ பிஎட் படித்த ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்திலுள்ள தெஹ் முண்டாவாரைச் சேர்ந்த சந்தீப் சவுத்ரி என்பது தெரியவந்துள்ளது.தருஹேராவின் ஹீரோ (Hero) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சந்தீப்சவுத்ரி, கொரோனா பொதுமுடக்கத்தை யொட்டி வேலையை இழந்துள்ளார். இதனால் விரக்தியிலும் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், தனதுகாதலியின் பெயரில் எம்டிஎன்எல் (MTNL) நிறுவனத்தின் சிம்கார்டு ஒன்றை வாங்கி, அதன்மூலம் ஹரியானா மற்றும் ராஜஸ்
தான் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் களை தொடர்புகொண்டு, தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தனிச்செயலாளர் என்று கூறி, சிலருக்கு வேலை கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்தே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் பேரில், தில்லி குற்றப்பிரிவு போலீசார் இளைஞர் சந்தீப் சவுத்ரியைராஜஸ்தானில் கைது செய்துள்ளனர்

;