tamilnadu

img

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது...  

தில்லி 
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் இன்னும் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை. ஜெட் வேகப் பரவலால் தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உலக மக்கள் தனது இயல்பு நிலையை இழந்து கடும் துன்பத்தைச் சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும், பிரிட்டனில் 39 ஆயிரம் பேரும், பிரேசிலில் 33 ஆயிரம் பேரும் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோயாளிகள் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் விரைவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 19 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறுகிய காலத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பிரேசிலில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோரும், ரஷ்யாவில் 4 லட்சத்து 49 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறுதல் செய்தியாக இதுவரை உலகில் 32 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

;