tamilnadu

img

கொரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்கள் பி.எப். நிதியிலிருந்து ரூ.80 ஆயிரம் கோடி பெற்றனர்...

புதுதில்லி:
ஊரடங்கினால் வேலை யிழப்பு, சம்பளக் குறைப்பு போன்றவற்றால் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30 ஆயிரம் கோடி யை பி.எப்., கணக்கிலிருந்து தொழிலாளர்கள் எடுத்துள்ளனர்.வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஆறு கோடி சம்பளதாரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களிடமிருந்து கட்டாய பங்களிப் கின் மூலம் பெறப்பட்ட ரூ.10லட்சம் கோடி நிதியை நிர்வகிக்கிறது. தொற்றுநோய் பரவுவதைக்கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா சூழலால் பி.எப்., கணக்கிலிருந்து எளிதில் பணம் எடுக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\

தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்படி, ஏப்ரல் தொடங்கி ஜூலை மூன்றாம்வாரம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 80 லட்சம் சந்தா தாரர்கள் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை  எடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் நிதி வெளியே சென்றிருப்பது 2021-ஆம் நிதியாண்டின் வருவாயை பாதிக்கும். கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், திரும்பப் பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள பணத்தில், 30 லட்சம் பேர் கொரோனா சூழலால் ரூ.8,000 கோடியை திரும்பப் பெற்றதாகவும், மீதம் ரூ.22,000 கோடியை 50 லட்சம் பேர் பொதுவான காரணங்கள் கூறி பெற்றிருப்பதாகவும் பிஎப் நிறுவனம் அறிவித்துள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்புகடுமையாக அதிகரித்து வருவதால்ஈபிஎஃப்ஒ  நிதியை திரும்பப் பெறுவது வேகமாக அதிகரித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

;