tamilnadu

img

சிபிஐயில் வேலையா? மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

புதுதில்லி:
சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது.சட்டம், சைபர், தரவு பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், தடய அறிவியல் உள்ளிட்டபாடங்களை புகழ்பெற்ற பல்கலைக்கழகங் களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம்ஒன்றை அறிவித்து இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ நடத்தி வருகிறது.இந்நிலையில் சிபிஐ பயிற்சியளித்து, வேலையும் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடி செய்து பணம் பெறப்படுவதாக சி.பி.ஐ.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இத்தகைய மோசடியில் இருந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் சிபிஐ எச்சரித்துள்ளது. 

;