tamilnadu

img

ஓராண்டில் மட்டும் ரூ. 1027 கோடியை அள்ளியது ப்ரூடெண்ட் அறக்கட்டளையிடம் ரூ.154 கோடி வாங்கிய பாஜக!

பாஜக கடந்த ஓராண்டில் மட்டும், 1027 கோடி ரூபாயை நன்கொடையாக திரட்டியுள்ளது. இது 6 தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. 2017-18 நிதியாண்டில் 6 தேசிய கட்சிகளுக்கு மொத்தம் ரூ. ஆயிரத்து 293 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்றால், இதில், பாஜகவுக்கு மட்டும் ஆயிரத்து 27 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. டி.எல்.எப். குழுமம் 52 கோடியையும், பாரதி குழுமம் 33 கோடியையும் அள்ளிக் கொடுத்துள்ளன. ஷ்ராவ் குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம், டோரெண்ட் குழுமம் ஆகியவை 20 கோடிக்கும் மேல் நிதி அளித்துள்ளன. குறிப் பாக, ‘ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளை’ என்ற அமைப்பு மட்டும் அதிகபட்சமாக 154 கோடி ரூபாயை பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது. பாஜக, தான் பெற்ற நன் கொடையில், 59.9 சதவிகிதத் தொகையை அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்தே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், மத்தியில் எதிர்க் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, கடந்த 2017-18 நிதியாண்டில் 199 கோடி ரூபாய் மட்டுமே நன்கொடையாக கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 51 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

;