tamilnadu

img

கோயம்புத்தூர்- மதுரைக்கு புதிய ரயில் எப்போது? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. கேள்வி

புதுதில்லி:
சேலம் கோட்ட ரயில்களின் வருவாய் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்களவையில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ப்யூஷ் கோயல் அளித்த பதில்களும் பின்வருமாறு:

பி.ஆர்,நடராஜன்: தமிழ்நாடுமாநில சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில், கோயம்புத்தூர்- பொள்ளாச்சி பயணிகள் ரயில், கோயம்புத்தூர்- மதுரை பயணிகள் ரயில் ஆகியவற்றில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை விபரங்கள் மற்றும் கடந்த மூன்றாண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் இவற்றால் ஈட்டப்பட்ட வருவாய் விபரங்கள், வருட வாரியாக, ரயில் வழித்தடம் வாரியாக குறிப்பிடவும்.அரசாங்கம் மேற்சொன்ன ரயில்களின் போக்குவரத்து, வருவாய் பற்றி மீள் பார்வை செய்கிறதா? அப்படியெனில், அதன் விபரங்கள் மற்றும் பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக  கோயம்புத்தூர்- மதுரைக்கு ரயில் நீட்டிப்பு மற்றும் புதிய ரயில் அறிமுகம் சம்பந்தமாக எடுத்துள்ள முடிவு என்ன? இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்ன?

இதற்கு மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல் பதிலளிக்கையில், இந்திய ரயில்வேக்கான தேவைமுறை ஒரே மாதிரி இருப்பதில்லை.அது பல்வேறு பகுதிகளுக்கிடையிலும் மற்றும் கால நிலை பொறுத்தும் மாறுகின்றன. கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் பிரிவு, கோயம்புத்தூர்- பொள்ளாச்சி பிரிவு, கோயம்புத்தூர்- மதுரை பிரிவு ஆகிய வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளில் செல்லும் ரயில்களின் உபயோகம், வருவாய், ஒதுக்கீட்டுப் பயன்பாடு ஆகியவற்றை காலமுறையில் மீள்பார்வை செய்கிறது. கடந்த மூன்றாண்டுகளில், வருட வாரியாக, இரு வழிகளிலும் பயணிக்கும் பயணியர் போக்குவரத்து, பயணியர் வருவாய் ஆகியவை கீழே கண்டுள்ளவாறு:

உத்தேச பயணியர் போக்கு வரத்து:(லட்சங்களில்)
கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம்- கோயம்புத்தூர் பிரிவு: 
2016-17.....32.52 லட்சம்
2017-18.....34.15லட்சம்
2018-19.....34.76 லட்சம்

கோயம்புத்தூர்- பொள்ளாச்சி- கோயம்புத்தூர் பிரிவு: 
2016-17.....0.35 லட்சம்
2017-18.....1.38 லட்சம்
2018-19.....5.24 லட்சம்

கோயம்புத்தூர்-மதுரை- கோயம்புத்தூர் பிரிவு:
2016-17....37.29 லட்சம்
2017-18....38.25 லட்சம்
2018-19....52.13 லட்சம்

உத்தேச பயணியர் வருவாய் (கோடிகளில்):
கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம்- கோயம்புத்தூர் பிரிவு:

2016-17....51.69 கோடி
2017-18....52.00 கோடி
2018-19....57.77 கோடி

கோயம்புத்தூர்- பொள்ளாச்சி- கோயம்புத்தூர் பிரிவு:
2016-17.....0.02 கோடி
2017-18.....0.29 கோடி
2018-19.....0.62 கோடி

கோயம்புத்தூர்- மதுரை- கோயம்புத்தூர் பிரிவு:
2016-17....50.25 கோடி
2017-18....55.68 கோடி
2018-19....63.28 கோடி ஆகும்.

மேலும், கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் பிரிவு ரயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, எண்.66622/66623 கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் MEMU என்ற கூடுதல் MEMU சேவைவசதி 01.02.2020 தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர,15.10.2019 முதல் 56183/56184 கோயம்புத்தூர்- பொள்ளாச்சி சேவை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக கோயம்புத்தூர்-மதுரைக்கு எந்த புதிய ரயில் சேவையும் அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தற்போது இல்லை. எனினும், கோயம்புத்தூர் மற்றும் மதுரையை இணைக்கும் வகையில் பழனியில் 56609 கோயம்புத்தூர்-பழனி சேவை,56623 பழனி- மதுரை பயணியர் சேவை, 56624 மதுரை- பழனி பயணியர் சேவை, மற்றும் 56608 பழனி-கோயம்புத்தூர் சேவை ரயில்கள்இரு வழிகளிலும் உபயோகத்திற்காக கிடைக்கின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

;