tamilnadu

img

சீனாவில் உள்ள எங்கள் மாணவர்களை அழைக்க மாட்டோம்...  மேகலாயா அரசு 

ஷில்லாங்
ஆசியக்கண்டத்தை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 250-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். குறிப்பாக நாளொன்றுக்கு 40 பேர் விதம் பலியாகி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் பயின்று வரும் மேகலாயா மாணவர்களை இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கும் திட்டம் இல்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.எல் ஹெக் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,"மத்திய அரசு இந்தியர்களைத் திரும்ப அழைப்பது பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை என்பதால், சீனாவில் பயின்று வரும் எங்கள் மாணவர்களைத் திரும்ப அழைக்கும் எந்த திட்டமும் தற்போது இல்லை. இருப்பினும் மேகாலயா பகுதியில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். இதுவரை மேகாலயாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தைத் தலைநகர் தில்லியிருந்து சீனாவின் வுஹான் பகுதிக்கு மத்திய அரசு அனுப்பவுள்ள நிலையில், மேகாலயா அரசின் இந்த திடீர் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

;