tamilnadu

img

இந்தியாவில் செயல்படுவதை எதிர்நோக்குகிறோம்....

புதுதில்லி:
‘டிக்டாக்’ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித் துள்ள நிலையில், “இந்தியாவில் உள்ள எங்கள் ஊழியர்களுக்கு ஒருசெய்தி” என்ற தலைப்பில், டிக்டாக்(Tik Tok) தலைமை செயல் இயக்குநர் கெவின் மேயர் (Kevin Mayer) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

“இணையத்தை ஜனநாயகம் ஆக்குவதற்கான எங்களின் உறுதிப்பாடே, எங்கள் முயற்சிகளை வழிநடத்துகின்றன. இந்த முயற்சியில் பெரிய அளவில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக நம்புகிறோம். 2018 முதல், இந்தியாவில் 200மில்லியனுக்கும் அதிகமான பயனர் கள் தங்கள் மகிழ்ச்சியையும் படைப் பாற்றலையும் வெளிப்படுத்தவும், சுய வெளிப்பாட்டைக் கொண்டாடவும், மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய சமூகத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ‘டிக்டாக்’ செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். டிக்டாக் மூலம், கலைஞர்கள், கதைசொல்லிகள், கல்வியாளர்கள் போன்றோரின் படைப்புகளை நாடுமுழுவதும் உள்ள பல லட்சக்கணக் கான மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளோம். உலகளாவிய அரங்கில்தங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளும்போது, ​​இந்த கலைஞர்கள் பலவாய்ப்பினை பெற்றுள்ளனர். 

அந்த வகையில், டிஜிட்டல் இந்தியாவின் மெயின்பிரேமில் தொடர்ந்துசெயல்படுவதை நாங்கள் எதிர் நோக்குகிறோம்” என்று அந்த கடிதத்தில் கெவின் மேயர் கூறியுள் ளார்.மேலும், “எங்கள் ஊழியர்களே எங்களின் மிகப்பெரிய பலம், அவர்களின் நல்வாழ்வுதான் எங்கள்முன்னுரிமை. இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை நாங்கள் கொண்டிருக்கின் றோம். எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங் கள் மேற்கொள்வோம்” என்றும் கெவின்குறிப்பிட்டுள்ளார்.

;