வெப் சீரிஸில் தன் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதால் அனுஷ்கா சர்மாவை அவரது கணவர் விராட்கோலி விவாகரத்து செய்ய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் குர்ஜார் வற்புறுத்தி உள்ளார்.
பாதாள் லோக் அதாவது பாதாள உலகம் என்ற கிரைம் த்ரில்லர் கலந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டது. படுகொலை முயற்சி குறித்த வழக்கை விசாரிக்கும் ஒரு காவலர் பற்றிய கதையாகும். இது 43 முதல் 53 நிமிடங்கள் கொண்ட கதையாகும். இதை நடிகை அனுஷ்கா சர்மாவும் கர்னேஷ் சர்மாவும் தயாரித்தனர். இந்த தொடரின் படப்பிடிப்பு 110 நகரங்களில் நடைபெற்றன. கதையாசிரியர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு காசியாபாத்தில் 6 வழிப்பாதை திட்ட தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட படங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இந்த தொடரில் நேபாள மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்ற எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில் உருவம் மாற்றப்படாத தனது படத்தை பயன்படுத்துவதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என அனுஷ்கா சர்மா மீது நந்த கிஷோர் புகார் தெரிவித்துள்ளார். அனுஷ்கா சர்மா மீது தேச துரோக வழக்க பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அத்தோடு இல்லாமல் விராட் கோலியை ஒரு தேசப்பற்றாளர். தேசத்திற்காக விளையாடுகிறீர்கள். இதனால் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.