tamilnadu

img

பல மடங்கு உயர்த்தப்படும் வாகனப் பதிவுக் கட்டணம்!

புதுதில்லி:
பெட்ரோல், டீசல் வாகனப் பதிவுக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துவதற்கு, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மோட்டார் வாகனம் சட்டத்தில் மோடி அரசு திருத்தம்கொண்டுவந்துள்ள நிலையில், அந்த திருத்தப்பட்ட மசோதாவை, மத்திய அமைச்சர்நிதின் கட்காரி வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவையில் மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.இந்த மசோதாவில்தான், பெட்ரோல், டீசலில் ஓடும் போக்குவரத்து வாகனங்களுக்கான, புதிய வாகனப்பதிவு மற்றும் மறுபதிவிற் கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தும் வகையில்சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இதன்படி, தற்போது பயணிகளின் கார்களுக்கு வசூலிக்கப்படும் பதிவுக்கட்டணம் ரூ. 600-இல் இருந்துரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 50-இல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்படுகிறது. கனரக வாகனங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணம்ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப் படுகிறது. பெட்ரோல் - டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து,மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே, பதிவுக் கட்டணங் களை உயர்த்தும் முடிவை, மோடி அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

;