tamilnadu

img

டி.வி. சேனல் : ஜவடேகர் புதிய உத்தரவு

புதுதில்லி:
“டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகும் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை பல நேரங்களில் ஆங்கிலத்தில்-தான் போடுகின்றனர். ஆனால் இனிவரும் காலங்களில் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுவதோடு, ஏதாவது ஒரு இந்திய மொழிகளிலும் தெரிவிக்க வேண்டும்” என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது நாடகங்களுக்கு மட்டுமல்லாமல், சினிமாக்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.