tamilnadu

img

வங்கிகளை தனியாருக்கு விற்க அவசியம் இல்லை... பொதுமக்களையே பங்குதாரர்களாக மாற்றலாம்!

புதுதில்லி:
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் தேவையில்லை என்றும்,பொதுமக்களையே வங்கிகளின் பங்குதாரர்கள் ஆக்கலாம் என்றும்ரிசர்வ் வங்கியின் வாரியத் தலைவர்சதீஷ் மராத்தே கூறியுள்ளார்.

வங்கி தேசியமயமாக்கலின் 51-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, ஜூலை 25 அன்று ஆன்லைன் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே சதீஷ் மராத்தே இந்தஆலோசனையை முன்வைத்துள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும்கூறியிருப்பதாவது:

நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக் கான நிதியாதாரத் தேவைகளுக்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது. வேண்டுமானால், பொதுமக்களுக்கே பங்குகளை விற்பனை செய்யலாம். இதன்மூலமும் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் பங்குகளை 26 சதவிகிதமாக குறைக்க முடியும்.பொதுத்துறை வங்கிகளின் உரிமையானது பொதுமக்களிடம் இன்னும் பெரியளவில் செல்ல வேண்டும். அவர்கள் அரசாங்க பங்குதாரர்களாக இருக்க வேண்டும். தனியார்மயம் செய்வதன்மூலம், கடந்த 51 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை நீக்குவது ஒரு மிகப்பெரியஇழப்பாகவே அமையும். பல ஆண்டுகள் தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலும், நமது நாடு ஏழை நாடாகவே உள்ளது. நிதி அணுகலை அதிகமாக்குவதற்கான முயற்சிகளும் ஓரளவிற்கே வெற்றி பெற்றுள்ளன.நாட்டின் 50 கோடி மக்கள் தொடர்ந்து முறையான நிதி முறைமைக்குள் வராதவர்களாகவே (Elusive) இருக்கின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் முயற்சிகள் இருந்த போதிலும்ஒரு வங்கி அல்லது நுண் நிதி நிறுவனத்தால் கூட அவை தொடப்படவில்லை. எனவே, நடைமுறைகளில் மாற்றம் வேண்டியது உள்ளது. உதாரணத்திற்கு எனது மகளே, கடந்த பல மாதங்களாக வணிகத்திற்காக, அரசு வங்கியிடமிருந்து, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கமுயன்றும் பெற முடியவில்லைஎனும்போது, சிறு வணிகப் பிரிவுடன், அரசு நடத்தும் வங்கிகளும் கிராமப்புறங்களுக்கான முழு அணுகுமுறையையும் மாற்றப்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு சதீஷ் மராத்தே கூறியுள்ளார்.

;