விரைவில் மூன்று மாநில தேர்தல் தேதி
புதுதில்லி:
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் நிறைவடைய இருப்பதையொட்டி, தீபாவளிக்கு உள்ளேயே தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நக்சல் ஆதிக்கமுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் குறித்த ஆலோசனைகளை முடித்த பிறகு, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்சம்: உள்துறை அதிகாரி கைது
புதுதில்லி:
மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் தீரக் சிங். ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பானபணிகளை கவனித்து வருபவர்களில் ஒருவர் ஆவார். இவர், அவரது வீட்டில் ரூ.16 லட்சம் லஞ்சம் வாங்கமுயன்றபோது சிபிஐ அதிகாரிகளால் வியாழனன்றுகைது செய்யப்பட்டுள் ளார். அவரிடமிருந்து ரூ. 16லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தரமான சாலைகளால் விபத்தாம்...
பெங்களூரு:
தரமான சாலைகளால்தான், சாலை விபத்துக் கள் நடப்பதாக கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்த பாஜக துணை முதல்வர்கோவிந்த் கர்ஜோல் கூறியுள்ளார். “கர்நாடகாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் விபத்துகள் நடக்கின் றன. இதற்கு மோசமான சாலைகள்தான் காரணம் என மீடியாக்கள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், தரமான சாலைகளால் தான் விபத்துகள் ஏற்படுகிறது என நான் நம்புகிறேன். பெரும்பாலான விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நடக்கிறது” என்று கர் ஜோல் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா கொழுப்புக் கட்டி அகற்றம்
அகமதாபாத்:
மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவுக்கு கழுத்தின் கீழ்பகுதியில் கொழுப்புக் கட்டி (Lipomo) இருந்து வந்துள்ளது. இதனால் அமித்ஷா சரியாக உட்கார முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, அகமதாபாத் நகரிலுள்ள ‘கேடி’ மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கொழுப்புக் கட்டி அகற்றப்பட்டுள்ளது.