tamilnadu

img

தீக்கதிர் முக்கியச் செய்திகள்

இந்தி தெரியாததால் தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட  ‘ஹிந்தி_தெரியாது_போடா’  ஹேஷ்டேக் டிவிட்டரில்  தேசிய அளவில் டிரெண்டானது. 

                                                      *************

தளர்வுகள் என்பது வாழ்வாதார த்துக்கானது. முகக் கவசம் அணிவதில் தளர்வு இல்லை. பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

                                                      *************

ரயில்வேயில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களை நிரப்புவதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

                                                      *************

நிகோபார் தீவுகளில் ஞாயிறன்று காலை 6.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

                                                      *************

கொரோனா நோயினால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

                                                      *************

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப்புக்கு ஆதரவாக டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினுக்கு அருகில் டிராவிஸ் ஏரியில் நடைபெற்ற படகுகள்  அணிவகுப்பில் ஏராளமான படகுகள் மூழ்கியதால் டிரம்ப் ஆதர வாளர்கள் கலக்கமடைந்தனர்.

                                                      *************

நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள், உயிரிழப்புகளைக் கொண்ட 35 மாவட்டங்களில் 5சதவீதத்திற்கும் கீழ் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.