tamilnadu

img

வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் ஆதார் எண் பெற ரிசர்வ் வங்கி உத்தரவு

நாடு முழுவதும் வங்கிகள் கேஸ் மானியம், உள்ளிட்ட பல காரணங்களை காட்டி வாடிக்கையாளர்களை மறைமுகமாக  கட்டாயப்படுத்தி ஆதார் எண்ணை வாங்கி உள்ளன. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 
வங்கியின் பல சேவைகளின்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்கின்றன. வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கும்போதும், புதிய கைபேசி இணைப்பு பெறும்போதும் வாடிக்கையாளர் தாமாக முன்வந்து 12 இலக்க ஆதார் எண் விவரத்தை கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்திற்கு கடந்த பிப்ரவரியில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.எனினும் மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,16வது மக்களவையின் பதவி காலம் முடிவடைந்ததால் மசோதா காலாவதியானது. எனவே புதிதாக மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். 

இந்த புதிய அவசர சட்டம் ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய கொண்டுவர ப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியதும் சிறார்களுக்கு அவர்களின் அடையாளத்தை கண்டறிய பயோமெட்ரிக் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக புதிய முறையை கொண்டுவர இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ சான்றுகளில் (ஓவிடி) ஆதார் எண்ணையும் சேர்த்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மானியம் உள்பட பயன்களை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் பயனைப் பெற வாடிக்கையாளர் விரும்பினால், அவரின் ஆதார் எண் போன்ற விவரங்களை வங்கிகள் பெற்று வாடிக்கையாளரின் ஆவண சான்றுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் வாடிக்கையாளரின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  
 

;