tamilnadu

img

நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்திடவேண்டும்

புதுதில்லி:
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுது வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்று திமுக மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி சிவா கோரினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் அன்று அவசரப் பொது முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் திருச்சி சிவா பேசியதாவது:

மருத்துவக் கல்லூரிகளிலும் பல் மருத்து வக் கல்லூரிகளிலும் சேர்வதற்கு மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதவேண்டும் என்பது விரும்பத் தக்க முடிவுகளை ஏற்படுத்தவில்லை. இது கிராமப்புறங்களிலிருந்து மிகவும் பிற் படுத்தப்பட்ட பொருளாதார நிலையில் படித்துவிட்டு வரும் மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அதில் சுமார் 6 லட்சம் பேர் தேர்ச்சியடைந்தார்கள்.  இவ்வாறு தேறிய மாணவர்கள் அனைவருமேபயிற்சி மையங்களுக்குச் சென்று படித்த மாணவர்களாவர். இதற்காக அம்மாணவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

5 மாணவர்கள் தற்கொலை
இவ்வாறு பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவில்லை. அவர்கள் +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும்கூட அவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் ஐந்துமாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக் கிறார்கள். எனவே, நீட் தேர்வினால் மாண வர்களின் தரத்தை உத்தரவாதம் செய்திட முடியாது. உலகில் மிகப்புகழ்பெற்ற மருத்து வர்கள் அனைவருமே நீட் தேர்வு எழுதி வந்தவர்கள் அல்ல.நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டமுன்வடிவு இன்னமும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என அறிகிறேன்.இது இன்னமும் மத்திய உள்துறை அமைச்ச கத்திலோ அல்லது சுகாதாரத்துறை அமைச்சக த்திலோ கிடப்பில் கிடப்பதாகத் தெரிகிறது. எனவே, இதனை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் தருக!
நாம் ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்ப டையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு மாநில அரசு, தங்கள் சட்டமன்றத்தில் ஒரு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்புகிறது என்றால் அதனை ஏற்று ஒப்புதல் அளித்திட வேண்டும். அதனை மதித்திட வேண்டும். அவ்வாறு மதித்திடாமல் செயல்பட்டால் அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பொருள். எனவே தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்விலிருந்து விலக்கி அளித்திட மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு திருச்சி சிவா கூறினார். 
(ந.நி.)

;