tamilnadu

img

மோடியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தில்லி மக்கள்!

‘தேச விரோதிகளை தோற்கடித்து விட்டனர்’

நவாப் மாலிக் கிண்டல்

புதுதில்லி, பிப்.12-    தேச விரோதிகளுக்கு வாக்க ளிக்க வேண்டாம் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை தில்லி மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக வும், அதனால்தான் பாஜகவுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என் றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) மூத்த தலைவர் நவாப் மாலிக் கிண்டல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநில அமைச்ச ராக இருக்கும் நவாப் மாலிக் இது தொடர்பாக மேலும் கூறுகையில், “பாஜகவின் வெறுப்பு அரசியல் மற் றும் அழுத்த தந்திரங்களைக் கண்டு மக்கள் மிகுந்த சோர்வு அடைந்துள்ள னர்; ஆம் ஆத்மி கட்சியின் சில தலை வர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்ட வழக்குகள் இருக்க வேண்டும் என்பதை பாஜக உறுதி செய்தது; ஆம் ஆத்மி கட்சி தொண் டர்களுக்கு அவப்பெயரை ஏற் படுத்தும் வகையில் சில விசாரணை களும் நடத்தப்பட்டது; ஆனால் இவை எதுவும் பாஜகவுக்கு சாதக மாக அமையவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலை ‘பயங்கரவாதி’ என்று பாஜக வினர் அழைத்த நிலையில், “கெஜ்ரி வால் பயங்கரவாதி அல்ல; அவர் தில்லியின் மகன்; உண்மையான தேச பக்தர் என்பதை தில்லி மக்கள் நிரூ பித்துள்ளனர்” என ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா கூறியுள்ளார். ‘பிப்ரவரி 8’ இந்தியா - பாகிஸ்தா னின் போட்டியாக இருக்கும் என்று பாஜக கூறியிருந்ததை குறிப்பிட்டு, பதிலடி கொடுத்துள்ள மற்றொரு ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “போட்டியில் இந்தியா (ஆம் ஆத்மி) வெற்றிபெற்றுள்ளது” என்று குறிப் பிட்டுள்ளார். இதன்மூலம், பாகிஸ் தான் (பாஜக) தோற்றுள்ளது என்ப தையும் மறைமுகமாக உணர்த்தி யுள்ளார்.

 

;