ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலைக்கு, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டி யுள்ளார். ‘இது ஒரு மதிப்புமிக்க திட்டமாக இருக்கும். முக்கிய சுற்றுலா தலமாக மாறும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் இங்கு ஓர் அழகான பூங்கா உருவாக்கப் படும்” எனவும் ஜெகன் அறிவித்துள்ளார்.