tamilnadu

img

முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று துவக்கம்

புதுதில்லி, ஏப். 10-17ஆவது மக்களவைத் தேர்தலின், முதல் கட்ட வாக்குப்பதிவு இந்தியாவில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வியாழனன்று நடைபெற உள்ளது.வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதில், முதல் கட்டமாக, 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு, ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தலில், ஆந்திரப் பிரதேசம்(25), அருணாசலப் பிரதேசம்(2), மேகாலயம்(2), மிசோரம், நாகாலாந்து(1), சிக்கிம்(1), அந்தமான்-நிகோபர் தீவுகள்(1), தெலுங்கானா (17), உத்தர்கண்ட் (5) என 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுதவிர, உத்தரப்பிரதேசம்(8), மேற்கு வங்கம் (2), பீகார்(4) ஆகிய மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு, பாரமுல்லா ஆகிய தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,279. இதில் 14 கோடியே 20 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்ய உள்ளனர். இவர்களில் 7,764 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 3957 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 20 மாநிலங்களில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

;