tamilnadu

img

கதுவா வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு சிபிஎம் வரவேற்பு

ஸ்ரீநகர்:
கத்துவாவில், எட்டு வயது சிறுமியைக் கும்பல் வன்புணர்வு செய்து, பின் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேரில் ஆறு பேருக்கு தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் திங்கள் அன்று அளித்த தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஷ்மீர் மாநிலத் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி வரவேற்றுள்ளார்.

மனிதகுலத்திற்கே எதிரான கயவர்கள் எட்டு வயதுச் சிறுமியை மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்திருந்தார்கள். கிரிமினல் குற்றம் என்றால் அது கிரிமினல் குற்றம்தான்.  அதற்கு சாதியோ, மதமோ, வர்ணமோ  அல்லது இனமோ கிடையாது. துரதிர்ஷ்டவசமாக, சில கேவலமான சக்திகள் இந்தக் கொடூரச்செயலை மதவெறிரீதியாக மென்மை யானதாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டி ருந்தார்கள். ஆனால், நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாகவும் இக்கொடூரச் செயலுக்கு எதிராக மாநில மக்களும், நாட்டுமக்களும் திரண்டு கண்டனக்குரல் எழுப்பி யதன் காரணமாகவும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இன்றைய நீதி மன்றத்தின் தீர்ப்பு உண்மைக்குக் கிடைத்த வெற்றியாகும். இத்தகைய வழக்குகளில் சமூகம் தங்கள் தத்துவார்த்த நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நின்று செயல்புரிந்திட வேண்டும். கிரிமினல் குற்றம் என்றால் கிரிமினல் குற்றம்தான். இதனை அனைத்துத்தரப்பினரும் கண்டித்திட வேண்டும். இவ்வாறு முகமது தாரிகாமி கூறியுள்ளார்.