tamilnadu

img

குடிமக்களின் அதிகாரத்தை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சி

புதுதில்லி:
இடதுசாரிகளின் ஆதரவோடு அமைந்த முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில், கிராமப்புற ஏழை மக்களுக்கான நூறுநாள் வேலைத் திட்டம், மலைவாழ் மக்களுக்கான வன உரிமைச் சட்டம், அரசின்செயல்பாடுகளை சாதாரண குடிமகனும் அறிந்து கொள்வதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவை முக்கியமானவை.ஆனால், தற்போதைய மோடிஅரசு அந்த சட்டங்களை முற்றிலுமாக சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. குறிப்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தைநீர்த்துப் போகச் செய்யும் வகையில், திருத்த மசோதா ஒன்றை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக கொண்டுவந்து, அதனை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.இந்நிலையில், மத்திய பாஜகஅரசின் இந்த திருத்த மசோதாவைக் கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா கடந்த 2005-ஆம்ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. கடந்த 10 வருடங்களில் 60 லட்சம் பேர் ஆர்டிஐ மூலம் பயனடைந்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை, நிர்வாகத்தில் பொறுப்புடமை என புதியகலாச்சாரத்தை அது கொண்டுவந் தது. இதன் விளைவாக நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என் பது அளவிட முடியாத அளவு பலப்படுத்தப்பட்டது. ஆர்டிஐ செயற்பாட்டாளர்கள் மூலமாக சமூகத்தின் பின் தங்கியவர்கள் மிகவும் பயன்பெற்றனர்.ஆனால், தற்போதைய மத்தியஅரசு ஆர்டிஐ சட்டத்தை தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான் தேர்தல் ஆணையம்,மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்துக்கு இணையான அதிகாரங்களுடன் செயல்பட்டு வரும் மத்திய தகவல் ஆணையத்தின் அந்தஸ்தையும் சுதந்திரத்தையும் சீர்குலைக்க- நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி முயற்சி செய்கிறது. ஆனால், இந்த செயல்பாடு
களானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அதிகாரத்தைக்குறைப்பதே ஆகும்.”இவ்வாறு சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

;