tamilnadu

img

எனக்கும் குழந்தைகளுக்கும் டீச்சர் ‘அம்மாதான்’

கோழிக்கோடு:
“நிபாவில் பாதிக்கப்பட்டு எனது லினிநிரந்தரமாக கண் மூடியபோது எங்களது வீட்டுக்கு ஒரு தாய் வந்தார். தாயை இழந்துவிட்ட எனது குழந்தைகளை அவர் தனதுமார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். அமைச்சர் கே.கே.சைலஜாதான் அன்று குன்றும் மலையும் ஏறி எங்களது செம்பனோடை புதுச்சேரி வீட்டுக்கு வந்தார். அவரது வார்த்தைகள் எனக்கும் குழந்தைகளுக்கும் அளித்த நம்பிக்கை மிகப்பெரியது”. இப்படி நெகிழ்ச்சியுடன் கூறியது லினியின் கணவர் சஜீஷ்.

மேலும் அவர் கூறுகையில், “இப்படிப்பட்ட ஒரு அமைச்சரைக் குறித்து கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதைக் கேட்டபோது உள்ளம் நொறுங்கியது. லினியின் மரணத்தின்போது ஆறுதல் வார்த்தைகளுடன் உலக மலையாளிகள் ஒட்டுமொத்தமாக எனக்கு துணை நின்றனர். அப்போது தொலைபேசியில் அழைத்துகூட முல்லப்பள்ளி விவரம் கேட்கவில்லை. குழந்தைகள் ரிதுல்-க்கும் சித்தார்த்-க்கும் சைலஜா டீச்சர் அம்மாவைப் போலத்தான்”. அமைச்சர் சைலஜாவை முல்லப்பள்ளி அவமானப்படுத்திய துயரமும், வலியும் அடக்க முடியாதவராக நெகிழ்ந்து பேசுகிறார் சஜீஷ்.

அன்று எங்களது எம்பியாக இருந்த போதிலும் அந்த பகுதியின் அருகில்கூட முல்லப்பள்ளியை காணவில்லை. அதனால்தான் அமைச்சரை விமர்சிப்பதற்கான தகுதி அவருக்கு உள்ளதா என்பதை சுயமாக பரிசீலிக்க வேண்டும். கெஸ்ட்ஆர்ட்டிஸ்ட் என டீச்சரை ஏளனம் செய்கிறாரே, அந்த நேரத்தில் பேராம்ப்பறா அருகில் எங்குமே கெஸ்ட் ரோலில்கூட முல்லப்பள்ளி இல்லை. அதன்பிறகும் பலமுறை எங்களை அமைச்சர் தொலைபேசியில் அழைத்து பேசினார். ஒருமுறை குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மனரீதியாக தளர்ந்து போயிருந்த நேரத்தில் ஆறுதல் கூறி ஊக்கமளித்தார். அதனால்தான் டீச்சரை அம்மா என்று அழைக்கத் தோன்றுகிறது என்கிறார் சஜீஷ்.

 

;