tamilnadu

img

அறிவித்த தேதிகளில் நீட், ஜேஇஇ தேர்வு : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,ஆக.17- நீட், ஜேஇஇ தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதி களில் திட்டமிட்ட படி நடை பெறும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப்படிப்பு களுக்கான நுழைவுத்தேர் வான நீட் ,  வரும் செப்டம் பர் மாதம் 13 ஆம் தேதி நடத்தப்படும் என்று  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. அதேபோல் ஜேஇஇ தேர்வு கள் செப்டமர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடை பெறும் என மனித வள அமைச் சகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில்,  கொரோ னா அச்சுறுத்தல் காரணமாக  நீட், ஜேஇ இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி 11 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்வை தள்ளி வைப்ப தால் மாணவர்களின்  எதிர்காலம் பாதிக்கப்படும். கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடி யாது. அனைத்து தடுப்பு நட வடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும். ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ள னரா? என்று உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியது.