tamilnadu

img

போராடும் மருத்துவர்கள் - சுகாதார ஊழியர்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு

புதுதில்லி:
மேற்கு வங்கத்தில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக திங்கள்கிழமை தலைநகரில் இயங்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களின் போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.போராடும் மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், போராடும் டாக்டர்களுடன் மேற்கு வங்க மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும் அவர்களின் பாதுகாப்புக்குத் தேவை
யான நடவடிக்கைகளை விரைவில் எடுத்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. 

டாக்டர்களின் போராட்டம் நீடிப்பதற்கு மாநில  அரசின் தடித்தனமான மற்றும் மிரட்டும் விதத்தில் அமைந்துள்ள அணுகுமுறையே காரணமாகும் என்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இத்தகைய அணுகுமுறையை ஏற்க முடியாது என்றும், மாநில அரசாங்கம், பாதுகாப்பு சம்பந்தமாக, போராடும் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

தாக்குதல்களுக்கு ஆளாகும் மருத்துவர்களைப் பாதுகாத்திடக் கூடிய விதத்தில் மத்தியச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசாங்கம் ஆழமாகப் பரிசீலனைசெய்திட வேண்டும், மருத்து வர்களின் வேலை நேரத்தைக் குறைத்திட மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், நோயாளிகளுக்குத் தரமானமுறையில் கவனம் செலுத்தக் கூடிய விதத்தில்  புதிய டாக்டர் களை நியமித்திட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.  போராடும் மருத்துவர்களைச் சந்தித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆஷா சர்மா, மைமூனா முல்லா,அஞ்சு ஜா, ஃபரிதா, கௌரி ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரி வித்தார்கள். (ந.நி.)

;