புதுதில்லி:
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இதன்படி நாட்டில், 77 இஸ்லாமியர்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 17-ஆவது மக்களவைத் தேர்தலில், வெறும் 27 பேர் மட்டுமே எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையிலும் ஒரே ஒரு இஸ்லாமியருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக-வின் வெற்றியானது, கணிசமாக இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை பறித்து விட்டது.