tamilnadu

img

மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

புதுதில்லி, ஆக. 2- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சர்  கங்காராம் மருத்துவமனை யில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (வயது 73)  கடந்த 30-ஆம் தேதி இரவு 7 மணி அள வில் டெல்லியில் உள்ள சர் கங்கா  ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனை களுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி  தில்லியின் சர் கங்கா ராம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஞாயிறன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் தெரி வித்துள்ளார். சோனியா காந்தி டிஸ்சார்ஜ் குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறியதாவது:- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஜூலை 30-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று (ஞாயிறு) மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அவர் கூறினார்.