புதுதில்லி:
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர், 2024-க்குள் இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறிவிடும் என்று சத்தியம் செய்யாத குறையாக கூறிக் கொண்டிருக்கின்ற னர்.
ஆனால், போதிய முதலீடுகள் வந்தால் மட்டுமே, அந்த இலக்கை எட்ட முடியும் என்று இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியுள்ளார்.அப்போது, “5 ட்ரில்லியன் டாலர்பொருளாதார இலக்கை நோக்கி,இந்தியா எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது?” என்றுகிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதுதான், “ஐந்து ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு முதலீடுகள் முக்கியத் தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.“2008 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஜிடிபி-யில் 40 சதவிகிதப் பங்குமுதலீடுகளாக இருந்தது. ஆனால்,இதுவே 2018ஆம் ஆண்டில், முதலீடுகளின் பங்கு 29 சதவிகிதமாகச் சரிந்துள்ளது” என்றும் கிருஷ்ணமூர்த்திசுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த சூழலில், முதலீட்டை ஊக்குவிப்பதற்கான மூன்று வழிகள் இருப்பதாகவும், “முதலாவது, நிலம் கையகப்படுத்துவது தொடர் பான சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; இரண்டாவது, தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சட்டத் சீர்திருத்தங்கள் அவசியம்: மூன்றாவது நாடு முழுவதும் சமமான விலைவாசியை உறுதிப்படுத்த வேண்டும்”- இவை அந்த வழிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.