புதுதில்லி,பிப்.21- மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்தும் அதனை திரும்பப்பெறக் கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தில்லி யின் ஷாகின் பாக் பகுதியில் பல நாட் களாக போராட்டம் நடந்து வருகின் றது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நிய மனம் செய்த சமரசக் குழு கடந்த இரண்டு நாட்களாக போராட்டக்காரர் களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த விதத் தீர்வும் எட்டப்படவில்லை. வியாழனன்று போராட்டக்காரர் களை சந்தித்த மத்தியஸ்தர் குழு தலைவர் சஞ்சய் ஹெக்டே, இப்பிரச் சனை உச்சநீதிமன்றத்தின் கவன த்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். ஆனால் போராட்டக்குழு வினர் உடன்படவில்லை. போராட்டத் தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவகையில் போராட்டம் நடத்தினால் உங்கள் குர லை உச்சநீதிமன்றம் கேட்கும் என்றும் மத்தியஸ்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.