tamilnadu

img

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்

புதுதில்லி,செப்.8-  முன்னாள் மத்திய அமைச்சரும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி உடல்நலக்குறைவால் தில்லியில் ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 95. இவர்  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிக்கார்பூர் என்ற ஊரில் 1923ஆம் ஆண்டில் செப்டம்பர் 14 அன்று பிறந்தார். 18 வயதிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கிய ராம் ஜெத்மலானி, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மும்பையில் குடியேறினார். 1959ஆம் ஆண்டில் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாக விளங்கிய கடற்படை தளபதி நானாவதி வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதம் செய்து கவனம் ஈர்த்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார்.  2010ஆம் ஆண்டில் இந்திய பார் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டத்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.  அவரது உடலுக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

;