tamilnadu

img

எதிர்க்கட்சியினர் விரைவில் என்னை வரவேற்பார்கள்... எம்.பி.யான ரஞ்சன் கோகோய் சொல்கிறார்

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மாநிலங்களவையின் நியமன எம்.பியாக, வியாழனன்று பதவியேற்றுக் கொண்டார்.மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத்துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு,காலை 11 மணிக்கு, கோகோய்க்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

ஆனால், பதவியேற்பு துவங்கியதுமே, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள், ‘அவமானம்’, ‘அவமானம்’ என்று முழக்கங்களை எழுப்பியவாறே, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ரஞ்சன் கோகோய் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதற்கு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.நியமன எம்.பி. ஒருவரின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல்முறை என்று ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.இந்நிலையில், தனது பதவியேற்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகோய், ‘எதிர்க்கட்சியினர் விரைவில் என்னை வரவேற்பார்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

;