tamilnadu

img

இறந்தபிறகும் உறுப்புகளை தானம் செய்து 8 பேருக்கு வாழ்வளித்த வாலிபர் அனுஜித்.... நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றியவர்

கொல்லம்:
மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அனுஜித் என்ற27 வயது வாலிபர் இறந்த பின்னரும் தனது உறுப்புகளை தானம் செய்து, 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். 

2010 ஆம் ஆண்டில் ஐடிஐ மாணவனாக இருந்த அனுஜித் ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதை பார்த்துள்ளார். ஆபத்தை அறிந்த அவர், கையிலிருந்த சிகப்பு பையை தூக்கிப் பிடித்தபடி அரைமணி நேரம் ஓடினார்.  ஆபத்தைப் புரிந்து கொண்டு ரயில் ஓட்டுநர்ரயிலை நிறுத்தியதால் நூற்றுக்கணக் கான பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. ஓட்டுநராக பணிபுரிந்துவந்த அனுஜித், ஊரடங்கு காரணமாக கொட்டாரக்கரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில்விற்பனையாளராக  பணிபுரிந்துள்ளார். ஜூலை மாதம் 14-ஆம் தேதி பைக்கில் சென்றபோது, எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அனுஜித் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

அனுஜித்தின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவே, முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் விரைவாக ஆலோசனை நடத்தப்பட்டன. பின்னர் அனுஜித்தின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள்,கை எலும்புகள், சிறுகுடல் உள்ளிட்டஉறுப்புகள் எட்டு பேருக்குப் பொருத்த ப்பட்டன.  நூற்றுக்கணக்கானோரின்  உயிர்களை காப்பாற்றிய அனுஜித்,  இறந்த பின்னரும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். மனிதநேயன்  அனுஜித்தை கேரள மக்கள்  பெருமையுடன் போற்றுகிறார்கள்.

;