tamilnadu

img

350 பேரை வேலையிலிருந்து நீக்கிய ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனம்!

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கத் தைக் காட்டி, பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வருகின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அடியோடு வேலையையே காலி செய்து வருகின்றன.

இந்தியாவில் ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஓலா, உபர், ஐபிஎம்,வீவொர்க், போயிங் உள்ளிட்டமுன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன.இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய டிராவல் ஏஜென்சியான மேக்மைட்ரிப் (MakeMyTrip) நிறுவனம் 350ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.இந்த எண்ணிக்கை அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர் களில் 10 சதவிகிதம் ஆகும். பயணங்களுக்கான முன்பதிவுகள் குறைந்தது, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது, உள்நாட்டு பயணத்திற்கு விதிக்கப் பட்ட தடை ஆகியவற்றால் தொழில் முடங்கி விட்டதாக மார்ச் மாதத்திலேயே ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனம்தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, கொரோனா தாக்கத்தால் தொழில் சூழலும், நம்பகத்தன்மையும் மாறிவிட்டது. இதனால் வேறு வழியின்றியே, எங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய வருத்தமான முடிவை எடுத்துள்ளோம் என்று ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனத்தின் தலைவரான தீப் கல்ரா தெரிவித்துள்ளார்.

;