tamilnadu

img

போராடும் மாணவர்களை பழிவாங்குவதா?

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வு, குடியுரிமை சட்டத் திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரத்து செய்ததற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் ஊரடங்கினால்  கொரோனா  பாதிப்பினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக் கும் சூழலில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நிர்வாகம் திட்டமிட்டு மாணவர்களை  பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.மே 21 ஆம் தேதி வெளியிடப் பட்ட சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலுக்கு மாறாக 70 விழுக்காடு வருகை பதிவேடு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவர் என்றும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை கட்ட வேண்டும் என்றும் நிர்பந்தித் துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ச. ஜெயபிரகாஷ், செயலாளர் கு. விண்ணர சன் ஆகியோர் விடுத்திருக் கும் அறிக்கை வருமாறு:-
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த  போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் படாது என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதை  இந்திய மாணவர் சங்கம் கண்டிக்கிறது.ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை பெரும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்குவது மாணவர்களின் திறமை, குடும்ப பின்னணி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் என அனைவருக்குமான உயர்கல்வி வாய்ப்பை உருவாக்கும்  நோக்கத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மாணவர் நலனில் துளிக்கூட அக்கறையற்ற தன்மையை வெளிப்படுத் தும் விதத்திலும், சர்வாதிகார போக்குடன் இருப்பதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் அராஜக போக்கை கண் டித்து அனைத்து மாணவர் அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

;