tamilnadu

img

பிரதமர் மோடிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் ராம ராஜ்ஜியத்தில் பழிவாங்கல், பாகுபாடு இருக்கக் கூடாது

புதுதில்லி:
ராமரை சிறுவனாகவும், பிரதமர் மோடியை பெரியவராகவும் சித்தரித்து, பாஜகவினர் பகிர்ந்த போஸ்டர் சர்ச் சையைக் கிளப்பியுள்ளது.ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவையொட்டி, சமூக வலைத்தளங்களில் ராமரைவிடவும் மோடியை துதிபாடி அதிகளவில் பாஜகவினர் கருத்துக்கள் மற்றும் படங் களை பதிவிட்டனர்.

அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஷோபா கரந்தலாஜே ஒருபடத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அந்த படம் கடவுளாகக்கருதப்படும் ராமரை ஒரு சிறுவனாகவும், மோடியைப் பெரிய மனிதராகவும் சித்தரித்து இருந்தது. அத்துடன், சிறியவயது ராமர், மோடியின் கைவிரல்களை பற்றிக்கொண்டு, கோயிலுக்குள் செல்வதாக அமைந்திருந்தது. கடவுளையே கோயிலுக்குள் அழைத்துச் சென்றவர் மோடி என்று பொருள்படும் விதமாக அது இருந்தது. பாஜகவினர் இதனை போட்டி போட்டுக் கொண்டு, சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வரும் நிலையில், ராம பக்தர்களையோ முகச் சுளிப்புக்கு ஆளாக்கியுள்ளது. பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக, கடவுள் ராமரைவிடவும் ஒரு பெரிய ஆளாக- ஒரு அவதாரமாக மோடியை காட்ட முயற்சிப்பது சரியல்ல! என்று சமூக வலைத்தளங்களில் ஆன்மிகவாதிகள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

தற்போது காங்கிரஸ் எம்.பி.சசி தரூரும் இதனைக் கண்டித்துள்ளார். “ராமரை விட உங்களை பெரிதாகக் காட்டுவதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், ஸ்ரீராம சரிதத்தில் எந்தப் பகுதியை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் என்றுசொல்ல முடியுமா?” என்று பிரதமர் மோடியை கேட்டுள் ளார். அன்பு, இரக்கம், பாசம்எதையும் மோடி கற்றுக்கொள் ளவில்லை என்றும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.

;