tamilnadu

img

சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...  மத்திய உள்துறை எச்சரிக்கை 

தில்லி 
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் 1000 கிமீ தூரத்தைக் கூட பொருட்படுத்தாமல் நடந்தே சொந்த ஊருக்குச் செல்கின்றனர். சிலர்  இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். வரும் வழியில் இறந்த வரலாறும் உண்டு. 

இந்நிலையில், வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனினும் பேருந்தில் மட்டுமே செல்ல வேண்டும் என விதிமுறையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் புன்யா சலிலா ஸ்ரீவஸ்த்வா கூறியதாவது," புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்குப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து வர சிறப்பு ரயில்களை விட வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளன. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என அவர் கூறினார்.  
 

;