tamilnadu

img

பொறுப்புகள் பறிப்பு: காங்கிரசில் இருந்து குஷ்பு விலகல்

சென்னை:
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்து வந்தார்.மேலும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டார்.குஷ்புவின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா அறிவித்தார்.இந்நிலையில், காங்கிரசின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். நீண்ட யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்தேன்.கட்சியில் இருந்து விலகினாலும் உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.