tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம்

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மோடி அரசு நாடாளுமன்றத்தில் தனக்கிருந்த மிருக பலத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்களை மத ரீதியாக தனிமைப்படுத்தும் நோக்கில்  நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் மாணவர்கள் லட்சக்கணக்கானோர் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 
இதற்கிடையில் கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இந்நிலையில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் தொடர்ந்து அமைதிகாத்து வந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தங்களது மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றுவோம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;