tamilnadu

img

ஜெய்ப்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை அகற்றுக...

புதுதில்லி:
ஜெய்ப்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுவின்சிலையை அகற்ற வேண்டும் என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. 

ஜெய்ப்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு சிலையை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தலித் இயக்கங்களும்,போராளிகளும் கோரி வருகின்றனர். இதனை தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியும் ஆதரிக்கிறது.இந்த சிலை, உயர்நீதிமன்ற வளாகத்தில் 31 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது. மனுஸ்மிருதி என்பது சமத்துவமின்மையையும், பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் உயர்த்திப்பிடிக்கும் மோசமான வடிவங்களைக் கொண்டதாகும் என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கருதுகிறது. இது, பிறப்பின் அடிப்படையில் சமத்துவ மின்மையை நியாயப்படுத்துகிறது. அதேபோன்று சாதி மற்றும் பாலின அடிப்படையில் தண்டனையும் அளிக்கப்படவேண்டும் என்று கூறுகிறது. எனவே, மனுவின் சிலையை உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று கோரி, அதனை எய்தக்கூடிய விதத்தில்நடைபெற்று வரும் பிரச்சாரங்களில் தலித் ஒடுக்குமுறை விடுதலைமுன்னணி தன்னையும் இணைத்துக் கொள்கிறது. (ந.நி.)

;