tamilnadu

img

சிஏஏ க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தில்லியில் மீண்டும் துப்பாக்கி சூடு

தில்லியில் ஷாகன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது ஒருவர் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லி ஷாகன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என்ற முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தில்லியில் ஜனவரி 30 அன்று ஜாமியா அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது