புதுதில்லி:
இந்திய ரிசர்வ் வங்கி, தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தில் 115 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.கடந்த வர்த்தக ஆண்டில் 501 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்கியிருந்த நிலையில், தற்போது திடீரென விற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத முடிவில், ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் மதிப்பு, 1987 கோடி டாலராக இருந்தது. அக்டோபர் 11-ஆம் தேதி 2670 கோடி டாலராக உயர்ந்திருந்தது. ந்நிலையிலேயே, 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஒரு பகுதி தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்று விட்டதாகவும் ரிசர்வ் வங்கி வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதிச் சிக்கலின்போது ரிசர்வ் வங்கி சுமார் 67 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனின் மத்திய வங்கிகளிடம் விற்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து, இப்போது 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க, ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.ரிசர்வ் வங்கி, பெரும்பாலும் தங்கத்தின் மதிப்பை மட்டுமே அறிக்கைகளில் கூறிவருகிறது. தங்கத்தின் அளவை பெரும்பாலும் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.